Untitled Document
May 28, 2024 [GMT]


ஹெலிகாப்டரில் ஏறும் போது தவறி விழுந்த மம்தா பானர்ஜி!
[Saturday 2024-04-27 18:00]

மேற்கு வாங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் ஏறும் போது இருக்கைக்கு அருகே தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 2024 -ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.


மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி!
[Tuesday 2024-05-28 18:00]

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து, இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி அன்று நடைபெறும். ஏழாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிரத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.


ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான பணம், தங்க நகைகள் பறிமுதல்!
[Tuesday 2024-05-28 18:00]

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாகக் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம், ஐந்தாம் கட்டம் மற்றும் ஆறாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதன்படி இன்னும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கன்னியாகுமரியில் 3 நாட்கள் தியானம் செய்கிறார் மோடி!
[Tuesday 2024-05-28 18:00]

மக்களவை தேர்தல் முடியும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வந்து அங்குள்ள விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் மேற்கொள்கிறார். இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இறுதிகட்ட தேர்தல் ஜூன் 1 -ம் திகதி நடைபெறவிருக்கிறது.


மடிக்கணினி சார்ஜ் செய்யும்போது பெண் மருத்துவருக்கு நேர்ந்த விபரீதம்!
[Tuesday 2024-05-28 18:00]

தமிழக மாவட்டம் நாமக்கல்லில் பயிற்சி பெண் மருத்துவர், தனது மடிக்கணினிக்கு சார்ஜ் செய்யும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாமக்கல்லின் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் சரணிதா (32). இவர் கோவையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.


போதை ஊசியால் சிறுவன் உயிரிழப்பு: இருவர் கைது!
[Tuesday 2024-05-28 06:00]

சென்னை புளியந்தோப்பு மன்னார் சாலை பகுதியைச் சேர்ந்த அமீர் என்பவரது மகன் ஜாகிர் (வயது 17). இந்தச் சிறுவன் 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் எலெக்ட்ரீசியன் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இத்தகைய சூழலில்தான் கடந்த 26 ஆம் தேதி வேலைக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு தனது நண்பரின் வீட்டுக்கு சிறுவன் சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து இந்தச் சிறுவன் போதை ஊசி செலுத்திக் கொண்டதாக கூறபடுகிறது.


பிரதமர் மோடி தமிழகம் வருகை!
[Tuesday 2024-05-28 06:00]

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாகக் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம், ஐந்தாம் கட்டம் மற்றும் ஆறாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது.


படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடல் அடக்கம்!
[Tuesday 2024-05-28 06:00]

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜா (வயது 35) மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கடந்த 20 ஆம் தேதி (20.05.2024) மதியம் 02:00 மணியளவில் தான் திருமணம் செய்து கொள்ளும் பெண் மற்றும் அவரது தோழிகளுடன் சேர்ந்து கேடிசி நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலுக்குச் சாப்பிட சென்றுள்ளார். அதன் பின்னர் தனது வாகனத்தை எடுப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் ஒன்று தீபக் ராஜாவைச் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதில் சம்பவ இடத்திலேயே தீபக் ராஜா துடிதுடித்து உயிரிழந்தார்.


‘குரூப் - 4 தேர்வர்கள் கவனத்திற்கு’ - டி.என்.பி.எஸ்.சி. முக்கிய அறிவிப்பு!
[Monday 2024-05-27 19:00]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வுக்கு http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


துடிக்க துடிக்க மருமகளை உயிருடன் எரித்துக்கொன்ற மாமனார்!
[Monday 2024-05-27 19:00]

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே அமைந்துள்ளது முத்துவிஜயபுரம் கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஜேசு. இவரது மகன் ஆரோக்கிய பிரபாகர். இவருக்கும் தட்டான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த உமா என்பவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு மரியஜெலினா, ஜெமிதெரசா என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த குடும்பம் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.


ஜுன் 1 முதல் அமுலுக்கு வரும் விதிகள்!
[Monday 2024-05-27 19:00]

வரும் ஜுன் 1 -ம் திகதி முதல் இந்தியாவில் அமுலுக்கு வரவுள்ள சில விடயங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை கருத்தில் கொண்டும், ஒவ்வொரு மாதத்தின் ஒன்றாம் திகதியை வைத்தும் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன.


பலத்த காற்றுடன் கரையை கடந்தது ரீமல் புயல்!
[Monday 2024-05-27 19:00]

வங்கக்கடலில் நிலவிய ரீமல் புயலானது மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் - வங்கதேசத்தின் கெப்புபாரா இடையே கரையைக் கடந்தது. ரீமல் புயலானது கரையை கடந்தாலும் கொல்கத்தாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த புயலானது கரையைக் கடந்தபோது மணிக்கு 135 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் மேற்கு வங்கத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்கள் துண்டிக்கப்பட்டு, குடிசை வீடுகள் இடிந்தது உள்பட பல்வேறு சேதங்கள் ஏற்பட்டது.


ரயில் பயணிகளுக்கு கொலை மிரட்டல்: போலீசார் அதிரடி!
[Monday 2024-05-27 06:00]

சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு விரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை அடைந்ததும் மதுபோதையில் இருந்த சில இளைஞர்கள் முன்பதிவு பெட்டியில் ஏறியுள்ளனர். இந்த இளைஞர் ரயிலில் புகைபிடித்தபடியும், சத்தமாகப் பாட்டு படியப்படியும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.


‘வெளிநாட்டு வேலை’ - அயலக தமிழர் நலத்துறை எச்சரிக்கை!
[Monday 2024-05-27 06:00]

பல்வேறு வேலை வாய்ப்புகளுக்காக தமிழ்நாட்டு இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக தகவல் தொழில்நுட்ப பணி என்ற பெயரில், கம்போடியா. தாய்லாந்து, மியான்மர் (பர்மா) ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சென்றவுடன் சட்டவிரோதமான இணையதள நடவடிக்கைகளில் ஈடுபடும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அம்மாதிரி சட்டவிரோதமான இணையதள பணிகளை செய்ய மறுக்கும் நபர்களைக் கடுமையாக துன்புறுத்துகிறார்கள். இதுவரை மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து கடந்த வருடம் மட்டும் 83 தமிழர்களை அயலகத் தமிழர் நலத்துறை மீட்டு வந்துள்ளது.


பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
[Monday 2024-05-27 06:00]

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ரிமால் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது வங்காள தேசம் மற்றும் அதையொட்டிய மேற்குவங்க மாநில கடற்கரை இடையே இன்று (26.05.2024) நள்ளிரவு ரிமால் புயல் கரையைக் கடக்கிறது. அதாவது சாகர் தீவுக்கும் கெபுபாராவுக்கும் இடையே இந்த புயல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது.


ரிமால் புயல்: களத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர்!
[Sunday 2024-05-26 18:00]

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ரிமால் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது வங்காள தேசம் மற்றும் அதையொட்டிய மேற்குவங்க மாநில கடற்கரை இடையே இன்று (26.05.2024) நள்ளிரவு ரிமால் புயல் கரையைக் கடக்கிறது.


நிலச்சரிவில் சிக்கிய கிராமம்: 670 பேர் மண்ணில் புதைந்த பேரதிர்ச்சி!
[Sunday 2024-05-26 18:00]

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 670 பேர் மண்ணில் புதைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான தகவலை அதிகாரப்பூர்வமாக ஐ நா அமைப்பு வெளியிட்டுள்ளது.


சிலந்தி அணைக்கு எதிர்ப்பு: தமிழக விவசாயிகள் போராட்டம்!
[Sunday 2024-05-26 18:00]

சிலந்தி ஆற்றின் அருகே கேரள அரசு தடுப்பணைக் கட்டுவதாக வெளியான தகவலையடுத்து தமிழக எதிர்க்கட்சிகள் இதற்கு தெரிவித்திருந்தது. இதன் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறையும் எனப் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.


அதி தீவிர புயலாக வலுப்பெறும் ரிமால்!
[Sunday 2024-05-26 18:00]

ரிமால் புயல் காரணமாக கொல்கத்தாவில் 21 மணிநேரத்திற்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கக்கடலில் வடக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு மத்திய கடல் பகுதியில் ரிமால் புயல் நிலைக்கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல் அதி தீவிரப்புயலாக வலுப்பெறும்.


சிறார்கள் உட்பட 27 பேர்கள் உடல் கருகி பலியான கோர சம்பவம்!
[Sunday 2024-05-26 08:00]

இந்திய மாகாணம் குஜராத்தில் கேளிக்கை விடுதியில் அமைந்துள்ள விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 சிறார்கள் உட்பட 27 பேர்கள் பலியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாகாணத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் gaming zone அமைந்துள்ளது. இங்கு குழந்தைகள், பெரியவர்கள் என பலர் கூடியிருந்தனர். இந்த நிலையில், தொடர்புடைய கேளிக்கை விடுதியில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.


'ரிமால்' புயல் எதிரொலி: கொல்கத்தா விமான நிலையம் மூடல்!
[Sunday 2024-05-26 08:00]

வங்கக் கடலில் உருவான 'ரிமால்' புயல் காரணமாக கொல்கத்தாவில் 21 மணி நேரத்திற்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று நண்பகல் முதல் 21 மணி நேரத்திற்கு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிமால் எதிரொலியாக தூத்துக்குடி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் கரையை ஒட்டிய பகுதியில் ரிமால் புயல் தீவிர புயலாக கரையை கடக்கும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 6 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!
[Sunday 2024-05-26 08:00]

டெல்லியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மருத்துவமனையில் உள்ள 12 குழந்தைகள் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஆறு குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடவுள் தனது திட்டத்தை வெளிப்படுத்தாமல் என்னை செய்யவைக்கிறார்: மோடியின் அண்மை பேச்சு!
[Saturday 2024-05-25 18:00]

ஒரு நோக்கத்திற்காக பரமாத்மா தான் என்னை அனுப்பியிருக்கிறார் என்று நம்புவதாக பிரதமர் மோடி மீண்டும் பேசியுள்ளார். ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "நான் பயலாஜிகலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன். கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பியிருக்கிறார். ஏதாவது ஒரு விடயத்தை செய்து முடிக்க வேண்டும் என்று அனுப்பியுள்ளார்.


"ரோசப்பட்டு கட்சியை கலைக்க வேண்டாம்" - சீமானை விமர்சிக்கும் பாஜக!
[Saturday 2024-05-25 18:00]

நாம் தமிழர் கட்சியை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றால் கட்சியை கலைத்து விடுவதாக சீமான் கூறிய நிலையில், தற்போது அதனை பாஜக விமர்சித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக இருந்து வருகிறது. அந்தவகையில், தற்போது நாம் தமிழர் கட்சிக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி நிலவி வருகிறது.


ரூ.640 கோடியில் ஆடம்பர சொகுசு வில்லா: மருமகளுக்கு பரிசளித்த அம்பானி மனைவி!
[Saturday 2024-05-25 18:00]

மருமகள் ராதிகா மெர்சண்டிற்கு ரூ.640 கோடி மதிப்பில் விலையுயர்ந்த ஆடம்பர சொகுசு வில்லா ஒன்றை நீடா அம்பானி பரிசளித்துள்ளார். Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.


குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்துகொள்ள 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை வெட்டிய கணவன்!
[Saturday 2024-05-25 18:00]

குழந்தையின் பாலினத்தை அறிய 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை அரிவாளால் வெட்டிய கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில், குழந்தையின் பாலினத்தை அறிய 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை அரிவாளால் கணவன் வெட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 19 -ம் திகதி படவுன் என்ற இடத்தில் நடைபெற்றது.


'காங்கிரஸுக்கு எத்தனை வாக்குகள்'-முகவர்களிடம் கணக்கு வாங்கும் ப.சிதம்பரம்!
[Saturday 2024-05-25 06:00]

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரின் மகனும் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக களமிறக்கப்பட்டு தேர்தல் முடிவடைந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வர இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அதற்குள் காங்கிரஸ் கட்சிக்கு உத்தேசமாக எத்தனை வாக்குகள் கிடைத்திருக்கும் என்பதை பூத் வாரியாக பதிவான வாக்குகள் அடிப்படையில் தேர்தல் கணக்கு போட்டு வருகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.


அதிரடி ரெய்டு: 1000 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு!
[Saturday 2024-05-25 06:00]

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே அல்லேரி பலாமரத்து ஓடை வனப்பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரியப்பெரிய டிரம்களில் ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


கைகள் கட்டப்பட்ட நிலையில் கடலில் மிதந்த சிறார்களின் உடல்கள்!
[Saturday 2024-05-25 06:00]

சென்னையில் துப்பட்டாவால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனும் சிறுமியும் கடலில் சடலமாக மிகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாதவரம் பால் பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீசாந்த் மற்றும் சந்தியா சிறுவர் சிறுமியான இவர்கள் அண்மையில் காணாமல் போனதாக இரு வீட்டாரின் பெற்றோர்களும் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இருவர் காணாமல் போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் இருவரின் சடலம் மிதப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா