Untitled Document
May 3, 2024 [GMT]
காதலித்த பெண்ணையே கட்டாயப்படுத்தி திருமணம்: உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
[Thursday 2024-04-04 18:00]

தமிழக மாவட்டம் விழுப்புரத்தில் இளைஞர் ஒருவர் கட்டாய திருமணத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (27). இவர் பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார். அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்க, ராதாகிருஷ்ணன் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.


"மோடியின் புதிய இந்தியா வில் டிஜிட்டல் வழிப்பறி" - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
[Thursday 2024-04-04 18:00]

மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் மோடி அரசு உருவியிருக்கிறார்கள் என்று தமிழக முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "மோடியின் 'புதிய இந்தியா'வில் டிஜிட்டல் வழிப்பறி! ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?


5 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச படம் காட்டிய தலைமை ஆசிரியர்!
[Thursday 2024-04-04 06:00]

கோவையில் ஐந்தாம் வகுப்பு மாணவியிடம் ஆபாசப் படங்களைக் காட்டிய தலைமை ஆசிரியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவன் புறம் பகுதியைச் சேர்ந்தவர் பிராங்க்ளின் (44). இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.


முதல்வர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம்: ஆய்வு செய்த அமைச்சர்!
[Thursday 2024-04-04 06:00]

பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த 200 இந்தியர்கள்!
[Thursday 2024-04-04 06:00]

Forbes உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. போர்ப்ஸ் பட்டியலில் 200 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 169 இந்தியர்களாக இருந்தது. இந்த அறிக்கையின்படி, இந்திய பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 954 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இது 675 பில்லியன் டொலர்களாக இருந்தது, இது கிட்டத்தட்ட 41 சதவீதம் அதிகரித்துள்ளது.


முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்க்கு இலங்கையில் தீவிர விசாரணை!
[Wednesday 2024-04-03 18:00]

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.


"ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தும் வலிமை கொண்டவர் மோடி" - சரத்குமாரின் பிரச்சார பேச்சு!
[Wednesday 2024-04-03 18:00]

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கும், கச்சத் தீவை மீட்பதற்கும் பிரதமர் மோடியால் மட்டும் தான் முடியும் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


"தாமரை மலரும், தமிழ்நாடும் வளரும்" - நடிகை நமிதா பிரச்சாரம்!
[Wednesday 2024-04-03 18:00]

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வடசென்னை பாஜக வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து நடிகை நமிதா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வரும் மக்களவை தேர்தலில் வடசென்னை தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இங்கு, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, திமுக சார்பில் சிட்டிங் எம்பியாக உள்ள கலாநிதி வீராசாமி, பாஜக சார்பில் பால் கனகராஜ் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அமுதினி வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.


கேரளாவில் பயங்கரம்: டிக்கெட் பரிசோதகருக்கு நேர்ந்த கொடூரம்!
[Wednesday 2024-04-03 18:00]

டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகரை பயணி ஒருவர் ரயிலில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான கேரளாவில், எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா நோக்கி சென்ற விரைவு ரயிலில் வினோத் என்ற டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டிருந்தார்.


பா.ஜ.க.-வை கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
[Wednesday 2024-04-03 06:00]

இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன், வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுகப்படுத்தி ஏப்ரல் 2 ஆம் தேதி வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். வீரத்தின் விளைநிலமான வேலூருக்கு வந்திருக்கிறேன்! முதல் விடுதலைப் போர் தொடங்கிய வேலூர் கோட்டைக்கு வந்திருக்கிறேன்! இப்போது ஜனநாயகம் காக்கும் இரண்டாம் விடுதலைப் போருக்கு வந்திருக்கிறேன். இந்தப் போரில் வெற்றிக்கு கட்டியம்கூறும், இந்த மாபெரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் என் மாலை வணக்கம்.


'பாஜகவும், காங்கிரஸும் விஷச் செடிகள்' - சீமான் பரப்புரை!
[Wednesday 2024-04-03 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.


திவாலான நிலையிலும் ரூ.5000 கோடி சொகுசு வீட்டில் வாழும் அனில் அம்பானி!
[Wednesday 2024-04-03 06:00]

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி, இந்தியாவின் மிகவும் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவர். மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானியின் இளைய மகன் மற்றும் இந்தியா மற்றும் ஆசியாவிலேயே பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் ஆவார். தந்தை திருபாய் அம்பானியின் மறைவுக்குப் பிறகு, சகோதரர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். முகேஷ் அம்பானி வணிகத்தில் உயர்ந்தார், அனில் அம்பானி பல இன்னல்களை சந்தித்தார்.


கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு திட்டம்: திமுக ஏன் பெருமிதம் கொள்கிறது?
[Tuesday 2024-04-02 18:00]

கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு தேசிய பள்ளி உணவுத் திட்டத்தைத் தொடங்குவதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்த நிலையில் திமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கனடா பள்ளியில் குழந்தைகளுக்கான உணவு திட்டம் தொடர்பாக திமுக தனது அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவுத் திட்டமாக தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெகுசிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


கச்சத்தீவு விவகாரம்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!
[Tuesday 2024-04-02 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.


"அந்த கட்சியில் சேர்ந்திருந்தால் ரூ.500 கோடி வந்திருக்கும்" - சீமான் வெளிப்படை பேச்சு!
[Tuesday 2024-04-02 18:00]

பாஜகவில் சேர்ந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் மதன் ஜெயபாலனை ஆதரித்து சீமான் நேற்று பேசினார்.


மக்களுக்கு விடுக்கப்பட்ட கோடை வெயில் எச்சரிக்கை!
[Tuesday 2024-04-02 18:00]

ஜூன் மாதம் வரை கோடை வெப்பம் அதிகரிக்கும் என இந்த வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கமானது அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 1 டிகிரியாவது வெப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஜூன் மாதம் வரை கோடை வெப்பம் அதிகரிக்கும் என இந்த வானிலை மையம் தெரிவித்துள்ளது.


'இன்று நாம் மோடியிடம் ஏமாந்த நாள்'- தயாநிதி மாறன் பரப்புரை!
[Tuesday 2024-04-02 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.


'உங்களுடைய உருட்டல் மிரட்டலுக்கு பயப்படமாட்டோம்' - இபிஎஸ் பேச்சு!
[Tuesday 2024-04-02 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.


கேரளாவில் சோகம்: 31 வயதில் உயிரை மாய்த்துக் கொண்ட பேராசிரியை!
[Tuesday 2024-04-02 06:00]

இந்திய மாநிலம் கேரளாவில் பேராசிரியை ஒருவர் தூக்கிட்டு உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெலிஸ் நசீர் (31). இவர் வயநாடு அருகேயுள்ள மேப்பாடியில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் ஓய்வெடுக்க தனது அறைக்கு சென்ற பெலிஸ் நசீர், மாலை வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.


ஒரே ஒரு பெண்ணிற்காக அமைக்கப்படும் வாக்குச்சாவடி!
[Monday 2024-04-01 18:00]

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 2 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. இங்கு, தமிழகம் போன்று முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 2 ஆம் தேதியும், மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதியும் எண்ணப்படுகின்றன.


திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால்!
[Monday 2024-04-01 18:00]

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.


LPG சிலிண்டர் விலை குறைப்பு!
[Monday 2024-04-01 18:00]

வணிக எரிவாயுவின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் நற்செய்தியை அறிவித்துள்ளது. வணிக நீதியாக பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 19 கிலோ சிலிண்டருக்கு ரூ.30 முதல் ரூ.32 வரை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.


பதில் சொல்லுங்கள் மோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 கேள்விகள்!
[Monday 2024-04-01 18:00]

கச்சத்தீவு விவகாரத்தை வைத்து பாஜக-வினர் பலரும் திமுக- காங்கிரஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், பிரதமர் மோடியிடம் மூன்று முக்கிய கேள்விகளை கேட்டுள்ளார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின். இன்று காலை X தளத்தில் பிரதமர் மோடி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது தொடர்பாக வரும் தகவல்கள் திமுக-வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.


'வெறும் 50 ரூபாய் தானா?'- அதிமுக கூட்டத்தில் வாக்குவாதம்!
[Monday 2024-04-01 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.


'அந்த மகளிர் சொன்ன ஒரு வார்த்தை போதாதா நமக்கு'- முதல்வர் பேச்சு!
[Monday 2024-04-01 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.


கேரளாவில் பயங்கரம்: மருத்துவமனைக்குள் புகுந்து பெண்ணை குத்திக்கொன்ற நபர்!
[Monday 2024-04-01 06:00]

இந்திய மாநிலம் கேரளாவில் நபர் ஒருவர், மருத்துவமனைக்குள் புகுந்து பெண்ணொருவரை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எர்ணாகுளம் மாவட்டம் முவட்டுபுலா பகுதியைச் சேர்ந்த பெண் சிம்னா சகீர் (35). இவரது தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


“தேர்தலில் மேட்ச் ஃபிக்சிங் செய்யும் மோடி” - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!
[Sunday 2024-03-31 17:00]

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.


“மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலை அமலில் உள்ளது” - மு.க. ஸ்டாலின்!
[Sunday 2024-03-31 17:00]

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா