Untitled Document
May 3, 2024 [GMT]
அத்வானி இல்லத்திற்கே வந்த ‘பாரத ரத்னா’ விருது!
[Sunday 2024-03-31 17:00]

இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு (2024) பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூர், பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்களான சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் இந்தியாவின் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.


ஓன்லைனில் ஓர்டர் செய்த கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு!
[Sunday 2024-03-31 17:00]

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஓன்லைனில் ஓர்டர் செய்யப்பட்ட கேக்கை சாப்பிட 10 வயது சிறுமி சில மணி நேரத்திலேயே உயிரிழந்தார். தற்போதைய காலத்தில் நாம் எந்தவொரு பொருள் வாங்கினாலும் அதனை ஓன்லைன் (Online) மூலமாகவே ஓர்டர் செய்து வாங்குகிறோம். வீட்டில் இருந்த படியே நமக்கு தேவையான பொருட்களை வாங்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. ஆனால், சில நேரங்களில் நடைபெறும் சம்பவங்கள் சோகத்தையும் ஏற்படுத்துகிறது.


ஓ.பி.எஸ். மீது வழக்குப்பதிவு!
[Sunday 2024-03-31 08:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளது.


தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!
[Sunday 2024-03-31 08:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., தலைமையிலான கூட்டணிகள் மூலம் தமிழக தேர்தல் களம் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. இதற்கிடையே மார்ச் 20 தேதி முதல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் கடந்த 27 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.இதனைத் தொடர்ந்து வேட்புமனுதாக்கலை திரும்ப பெறுவதற்கான அவகாசம் நேற்றுடன் (30.03.2023) நிறைவு பெற்றது.


போராட்டத்திற்கு தயாராகும் முதல்வர்களின் மனைவிகள்!
[Sunday 2024-03-31 08:00]

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.


விசிக, மதிமுகவிற்கு சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!
[Saturday 2024-03-30 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.


100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை!
[Saturday 2024-03-30 18:00]

தேர்தல் நாளன்று வாக்களிக்க வசதியாக, நூறு நாள் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கிராமப்புற தொழிலாளர்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.


சீமான் பிரச்சாரத்திற்கு தடபுடலாக உணவு ஏற்பாடு!
[Saturday 2024-03-30 18:00]

மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்திற்கு வரும் நேரத்தில் பலவகையான உணவுகள் ஏற்பாடு செய்வதற்கு லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம். 40 மக்களவை தொகுதிக்கான வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதில் 20 பெண் வேட்பாளர்களும், 20 ஆண் வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர்.


கல்லூரி மாணவர் வங்கி கணக்கிலிருந்து ரூ.45 கோடி பரிவர்த்தனை: விசாரணையில் வெளிவந்த உண்மை!
[Saturday 2024-03-30 18:00]

கல்லூரி மாணவரின் பான் எண்ணை தவறாக பயன்படுத்தி அவரது வங்கிக் கணக்கில் ரூ.46 கோடி பரிவர்த்தனை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரமோத் குமார் தண்டோடியா.


நடைப்பயிற்சியில் வாக்கு சேகரிப்பு: சேலத்தில் களமிறங்கிய மு.க.ஸ்டாலின்!
[Saturday 2024-03-30 08:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.


“விஜயபிரபாகரன் பெயரிலேயே பெரிய ராசி இருக்கிறது” - ராஜேந்திரபாலாஜி!
[Saturday 2024-03-30 08:00]

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் அறிமுகக் கூட்டம் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார். தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன், தனது வெற்றிக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வாக்கு சேகரித்துப் பேசினார்.


“தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகை” - அமைச்சர் உதயநிதி!
[Saturday 2024-03-30 08:00]

தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.


பில் கேட்ஸ்க்கு தூத்துக்குடி முத்தை பரிசளித்த மோடி!
[Friday 2024-03-29 16:00]

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ்க்கு தூத்துக்குடி முத்தை இந்திய பிரதர் நரேந்திர மோடி பரிசளித்தார். உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் (bill Gates) உடன் AI முதல் டிஜிட்டல் பிரிவை கட்டுப்படுத்துவது வரையிலான பல்வேறு விடயங்கள் குறித்து இந்திய பிரதமர் மோடி உரையாடினார்.


துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்!
[Friday 2024-03-29 16:00]

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.


முதல் மாதவிடாய் எதிர்கொண்ட 14 வயது சிறுமி: மன அழுத்தத்தில் எடுத்த விபரீத முடிவு!
[Friday 2024-03-29 16:00]

மாதவிடாய் குறித்த மன அழுத்தம் காரணமாக மும்பையில் 14 வயது சிறுமி விபரீத முடிவு (உயிரிழப்பு) எடுத்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் Makwani பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, தனது முதல் மாதவிடாய் சந்தித்த நிலையில் வியாழக்கிழமை இரவு விபரீத முடிவு (உயிரிழப்பு) எடுத்து கொண்டுள்ளார். உறவினர்கள் விபரீத முடிவு குறித்து அறிந்ததும் விரைவாக சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.


ரூ.921 கோடிக்கு சொத்து: யார் இந்த சுயேட்சை வேட்பாளர்?
[Friday 2024-03-29 16:00]

மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ.921 கோடி சொத்து காட்டிய சுயேட்சை ஒருவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் தோப்பூரைச் சேர்ந்த கன.வேழவேந்தன் (50). இவர், மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாளில், கடைசி நபருக்கு முந்தைய நபராக மனு தாக்கல் செய்ய வந்தார்.


தமிழகத்தில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்பு!
[Friday 2024-03-29 07:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.


பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: முக்கிய தகவலை வெளியிட்ட என்.ஐ.ஏ.!
[Friday 2024-03-29 07:00]

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.


சென்னையில் அதிர்ச்சி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!
[Friday 2024-03-29 07:00]

சென்னையில் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் தனியார் கேளிக்கை விடுதி அமைந்துள்ளது. இதன் அருகே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேளிக்கை விடுதியின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது.


மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!
[Thursday 2024-03-28 18:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.


அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!
[Thursday 2024-03-28 18:00]

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.


வேட்பு மனுத்தாக்கல்: வெளியானது அண்ணாமலையின் சொத்து மதிப்பு!
[Thursday 2024-03-28 18:00]

கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவரின் சொத்து மதிப்பு விபரங்கள் வெளியாகியுள்ளது. கோவையில் போட்டியிடும் அண்ணாமலை நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்த போது பிராமண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதன்படி, அண்ணாமலையிடம் கையிருப்பில் ரொக்கமாக ரூ.5.11 லட்சம் உள்ளது எனவும், வங்கி இருப்பில் ரூ.25,30,492 உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.


இங்கிலாந்தில் குடியுரிமை பெற்றவர் நாம் தமிழர் கட்சி பொதுச் செயலாளரா? - வெடித்தது அடுத்த சர்ச்சை!
[Thursday 2024-03-28 18:00]

இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் இந்தியாவில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனுவில் கட்சி பொதுச்செயலாளராக கையெழுத்திட முடியுமா என்று சர்ச்சைகள் எழுந்துள்ளது. 40 மக்களவை தொகுதிக்கான வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதில் 20 பெண் வேட்பாளர்களும், 20 ஆண் வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர்.


தனக்கு தானே ஊசிசெலுத்தி உயிரை மாய்த்துக்கொண்ட இளம் மருத்துவர்!
[Thursday 2024-03-28 06:00]

இந்திய மாநிலம் கேரளாவில் இளம் பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் அபிராமி. 30 வயதான இவர், பிரதீஷ் ராகு என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.


“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - முதல்வர் பதிலடி!
[Thursday 2024-03-28 06:00]

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.


தமிழகத்தில் 1749 வேட்பு மனுக்கள் தாக்கல்!
[Thursday 2024-03-28 06:00]

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. மேலும் தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி (27.03.2024) நாள் ஆகும்.


ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: சென்னையில் பரபரப்பு!
[Wednesday 2024-03-27 18:00]

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
[Wednesday 2024-03-27 18:00]

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா