Untitled Document
May 19, 2024 [GMT]
பிரித்தானியாவில் மனைவியை கொன்று உடலை 224 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய கணவன்!
[Sunday 2024-04-07 16:00]

பிரித்தானியாவில் மனைவியை கொன்று உடலை 224 துண்டுகளாக வெட்டி கணவன் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள செரிமொனியல் மாகாணம் லிங்கொன் பகுதியை சேர்ந்த 28 வயதான நிகோலஸ் மெட்சன் 26 வயதான ஹொலி பிரம்லி இருவரும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.


பல லட்சம் கோடி மதிப்புள்ள புதையல்களுடன் மூழ்கிய 6 கப்பல்கள்!
[Sunday 2024-04-07 16:00]

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, கியூபாவிலிருந்து புறப்பட்ட கப்பல் வெஸ்ட் பாம் கடற்கரையில் மூழ்கியது. ஸ்பெயின் மன்னருக்காக அனுப்பப்பட்ட அரிய நாணயம் உட்பட அன்றைய காலத்தில் 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க கலைப்பொருட்கள் அதில் நிரப்பப்பட்டிருந்தது. இன்றைய காலகட்டத்தில் அதன் விலை பல ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும். இந்த புதையல் தண்ணீரில் 15 அடி ஆழத்தில் இருந்தது, ஆனால் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், அதனை பிரபல புதையல் வேட்டைக்காரர் ஷ்மிட்ஸ் தேடி கண்டுபிடித்தார்.


நெதன்யாகுவுக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள்!
[Sunday 2024-04-07 08:00]

காஸா மீதான போர் தொடங்கி 6 மாதங்களான நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயக சதுக்கம் என தற்போது அறியப்படும் பகுதியில் சுமார் 100,000 மக்கள் திரண்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் உடனே நடத்தப்பட வேண்டும் என்றே மக்கள் முழக்கங்கள் எழுப்பியுள்ளனர்.


'சுயநலவாதி, மிகவும் ஆபத்தானவர்' - ட்ரம்ப் தொடர்பில் முன்னாள் அதிகாரிகள் அச்சம்!
[Sunday 2024-04-07 08:00]

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் ஆட்சியின் போது அவரது நம்பிக்கையைப் பெற்ற பல அதிகாரிகள் தற்போது அவர் நாட்டை ஆளத் தகுதியற்றவர் என கருத்து தெரிவித்துள்ளனர். டொனால்டு ட்ரம்புக்கு அமெரிக்க மக்கள் இன்னொரு வாய்ப்பளிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர். டொனால்டு ட்ரம்ப் மிகவும் ஆபத்தானவர், மிகவும் சுயநலவாதி, மிகவும் தீவிர போக்கு கொண்டவர் என அவரது முன்னாள் அதிகாரிகள் பலர் தெரிவித்துள்ளனர்.


சொந்த பிள்ளையை மில்லியன் பவுண்டுகளுக்கு விற்க முயன்ற கொடூர தாய் சடலமாக மீட்பு!
[Sunday 2024-04-07 08:00]

சொந்த பிள்ளையை தற்காலிக கூண்டில் அடைத்து வைத்து, மில்லியன் பவுண்டுகளுக்கு விற்கவும் முயன்ற கொடூர தாயார் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்கொட்லாந்தின் Ochiltree கிராமத்தை சேர்ந்த 37 வயது Claire Boyle என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிள்ளையை கவனிக்கத் தவறியதாக இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.


14 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்: பிரான்ஸ் அரசு துவக்கியுள்ள அவசர விசாரணை!
[Saturday 2024-04-06 16:00]

பிரான்சில், 14 வயதுச் சிறுமி ஒருத்தியை, ஒரு பதின்ம வயதுப்பெண்ணும் இரண்டு பையன்களும் சேர்ந்து தாக்கியதில் அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, பிரான்ஸ் அரசு அவசர விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது. தெற்கு பிரான்சில் அமைந்துள்ள Montpellier என்னுமிடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் Samara என்னும் 14 வயதுச் சிறுமியை, அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவியும், இரண்டு மாணவர்களும் சேர்ந்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்கள்.


பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டும் கனடா!
[Saturday 2024-04-06 16:00]

இந்தியா தங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டிவந்த கனடா, தற்போது மற்றொரு நாட்டின்மீதும் குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளது. கனடாவின் உளவுத்துறை ஏஜன்சி, கனடாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தானும் தலையிட்டிருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.


ரஷ்யா போர் விமானங்களை ட்ரோன்கள் மூலம் தாக்கி அழித்த உக்ரைன்!
[Saturday 2024-04-06 16:00]

உக்ரைன் - ரஷ்யா போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவில் இருந்து வந்த 6 போர் விமானங்களை ட்ரோன்கள் மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் எல்லைப் பிராந்தியமான ரோஸ்தொவில் அமைந்துள்ள மொரொஸோவ்ஸ்க் விமானதளத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சூரிய ஒளியை திருப்பி அனுப்பி பூமியை குளிர்விக்க அமெரிக்க ஆய்வாளரின் திட்டம்!
[Saturday 2024-04-06 16:00]

கிளவுட் ப்ரைட்டனிங் என்ற முறையைப் பயன்படுத்தி சூரிய ஒளியை மீண்டும் விண்வெளிக்கே திரும்பி பூமியை குளிர்விக்க சோதனை நடத்த புதிய வழி ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் முன்மொழிந்து உள்ளனர். உலக வெப்பமயமாதல் பெரும் தலைவலியாக இந்த பூமிக்கு உள்ளது. பருவநிலை மாறுபாடு, இயற்கை சீற்றங்கள் அதிகரிப்பு ஆகியவற்றுக்கு வெப்பமயமாதலே காரணமாக உள்ளது.


தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை: விசித்திர விளக்கமளித்த இஸ்ரேல்!
[Saturday 2024-04-06 07:00]

ஹமாஸ் படைகளின் துப்பாக்கிதாரியை இலக்கு வைத்த நிலையில், தொண்டு நிறுவன ஊழியர்கள் சிக்கியதாக இஸ்ரேல் விசித்திர விளக்கமளித்துள்ளது. குறித்த விவகாரம் சர்வதேச கவனத்தை ஈர்த்ததுடன், அந்த சம்பவம் மிக மோசமான தவறு என்றும் விதிகளை மீறிய செயல் என்றும் இஸ்ரேல் ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.


இலங்கையர் நால்வர் பணயக்கைதியாக்கப்பட்ட விவகாரம்: சிக்கிய ஆசிய நாட்டவர் குழு!
[Saturday 2024-04-06 07:00]

வேலைவாய்ப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றி, நான்கு இலங்கையர்களை பணயக்கைதியாக்கிய பாகிஸ்தான் நாட்டவர்கள் நால்வர் கைதாகியுள்ளனர். குறித்த நால்வரையும் நேபாள நாட்டில் காட்மண்டு பொலிசார் கைது செய்துள்ளனர். வியாழக்கிழமை கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே அந்த நால்வரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி நகுல் போகரேல் தெரிவித்துள்ளார்.


ஹிஜாப் விவகாரம்: ரூ 145 கோடி இழப்பீடு பெற்றுக்கொண்ட பெண்கள்!
[Saturday 2024-04-06 07:00]

ஹிஜாப் விவகாரத்தில் தங்களின் உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி வழக்குத் தொடந்த இஸ்லாமிய பெண்கள் இருவருக்கு நியூயார்க் நகர நிர்வாகம் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 2018ல் ஜமிலா கிளார்க் மற்றும் அர்வா அஜீஸ் ஆகிய இரு பெண்கள் தங்களின் உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி வழக்குத் தொடந்தனர். மன்ஹாட்டன் மற்றும் புரூக்ளினில் புகைப்படம் பதிவு செய்யும் முன்னர் ஹிஜாப்களை அகற்றுமாறு பொலிசார் அவர்களை கட்டாயப்படுத்திய சம்பவம் தங்களை அவமானப்படுத்தியதாகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.


அதிகரித்து வரும் சுவிஸ் மக்கள் தொகை: கட்டுப்படுத்த அரசியல் கட்சி கூறும் சர்ச்சைக்குரிய திட்டம்!
[Saturday 2024-04-06 07:00]

சுவிட்சர்லாந்தில் மக்கள்தொகை அதிகரித்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரியுள்ளது அரசியல் கட்சி ஒன்று. சுவிஸ் மக்கள்தொகை, 2050ஆம் ஆண்டுக்கு முன் 10 மில்லியனைத் தாண்டிவிடாதவகையில் அதைக் கட்டுப்படுத்துமாறு சுவிஸ் அரசியல் கட்சி ஒன்று அரசைக் கோரியுள்ளது. அதற்கு ஆதரவாக அக்கட்சி முன்வைத்துள்ள பிரேரணை ஒன்றில் இதுவரை 115,000 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள்.


கரை ஒதுங்கிய அந்த மீன்: தைவானை உலுக்கிய மோசமான நிலநடுக்கம்!
[Friday 2024-04-05 06:00]

பேரழிவிற்கு முன்னர் விசித்திரமான ஆழ்கடல் மீன் ஒன்று பொதுமக்கள் கண்ணில் படும் என்ற தைவான் மக்களின் நம்பிக்கை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தைவான் நாட்டை மொத்தமாக உலுக்கிய மிக மோசமான நிலநடுக்கத்தை குறித்த மீன் கணித்திருக்கலாம் என்றே கூறுகின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் தீவு நாடான தைவான் எதிர்கொண்டிராத மிக மோசமான நிலநடுக்கத்தை புதன்கிழமை பகல் எதிர்கொண்டுள்ளது.


இஸ்ரேலுக்கு திடீர் மிரட்டல் விடுத்த ஜனாதிபதி பைடன்!
[Friday 2024-04-05 06:00]

காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமரை கட்டாயப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களையும் தொண்டு நிறுவன ஊழியர்களையும் பாதுகாக்க தவறினால் அமெரிக்காவின் ஆதரவையும் இழக்க நேரிடும் என்றும் ஜோ பைடன் எச்சரித்ததாக கூறப்படுகிறது.


ரஷ்யாவால் அச்சுறுத்தல்: ஜனாதிபதி மேக்ரான் வெளிப்படை!
[Friday 2024-04-05 06:00]

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் மீது ரஷ்யா மோசமான முறையில் குறிவைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுவரையான தரவுகளின் அடிப்படையில், தமக்கு இதில் சந்தேகமே இல்லை என்றும் ஜனாதிபதி மேக்ரான் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த மேக்ரான், அதில் சந்தேகமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


பிரித்தானிய பெண்களை மோசமாக விமர்சித்துள்ள புடின் கூட்டாளி!
[Thursday 2024-04-04 18:00]

புடினுடைய முக்கிய கூட்டாளிகளில் ஒருவர், பிரித்தானிய பெண்களை மோசமாக விமர்சித்துள்ளதுடன், உக்ரைன் ஜனாதிபதியைக் கொல்லவேண்டும் என்றும் கூறியுள்ளார். புடினுடைய முக்கிய கூட்டாளிகளில் ஒருவரான Dmitry Medvedev என்பவர், பிரித்தானிய பெண்களை மீன் முகம் கொண்ட விரும்பத்தகாத பெண்கள் என விமர்சித்துள்ளார்.


பொது இடங்களில் ரகசியமாக காதலை வெளிப்படுத்தும் வில்லியம் கேட் தம்பதியர்!
[Thursday 2024-04-04 18:00]

தன் காதல் மனைவி இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் என்றதும் இளவரசர் வில்லியம் எவ்வளவு துடிதுடித்துப்போனார் என்பது உலகத்துக்கே தெரியும். கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, வில்லியம் கேட் தொடர்பான செய்திகள் பல தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளன.


ஜேர்மன் மாகாணமொன்றில் வித்தியாசமான முறையில் போராட்டத்தில் இறங்கிய போலீசார்!
[Thursday 2024-04-04 18:00]

ஜேர்மன் மாகாணமொன்றில், தங்களுக்கு அரசு போதுமான சீருடை வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொலிசார் pant அணியாமல் பணிக்கு வந்துள்ளார்கள். ஜேர்மன் மாகாணமான பவேரியாவில், தங்களுக்கு போதுமான சீருடை வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொலிசார் pant அணியாமல் பணிக்கு வந்துள்ளார்கள்.


நிரந்தரக் குடியுரிமை விண்ணப்பக் கட்டணங்களை உயர்த்தும் கனடா!
[Thursday 2024-04-04 18:00]

கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, 2024ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல், குறிப்பிட்ட நிரந்தரக் குடியிருப்பு (PR) கட்டணங்களை அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது . கனடாவின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளின்படி(IRPR) இந்த கட்டண உயர்வு அறிமுகப்படுத்தப்படுவதாக கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.


இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை: கடும் நெருக்கடியில் பிரித்தானிய பிரதமர்!
[Thursday 2024-04-04 06:00]

பிரித்தானியர்கள் உட்பட 7 தொண்டு நிறுவன ஊழியர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுக்கு ஆயுதங்களை விற்பதை நிறுத்துவதற்கான அரசியல் நெருக்கடியை பிரதமர் ரிஷி சுனக் எதிர்கொண்டுள்ளார். மூன்று முக்கிய பிரித்தானிய எதிர்க்கட்சிகள் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.


வெறும் 150 ஆசனங்கள்: பேரிழப்பை சந்திக்கவிருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி!
[Thursday 2024-04-04 06:00]

இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவிருக்கும் பொதுத் தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி பேரிழப்பை எதிர்கொள்ளும் என்றே கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. புதன்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், எதிர்க்கட்சியான தொழிற்கட்சி 400 ஆசனங்களுக்கு மேல் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


உலகம் எப்போது அழியும்? - பாபா வங்காவின் கணிப்பு!
[Thursday 2024-04-04 06:00]

பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்காவின் கணிப்பின்படியே 2024 ல் உலக அளவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் பேரழிவு உட்பட பல்வேறு கணிப்புகளை வெளியிட்டுள்ள பாபா வங்கா, 2024 தொடர்பிலும் தமது கணிப்பினை பதிவு செய்துள்ளார்.


பெண்கள் தனியாகப் பயணிக்க சிறந்த நாடு; முதலிடம் யாருக்கு தெரியுமா?
[Wednesday 2024-04-03 18:00]

2024 ஆம் ஆண்டில் பெண்கள் தனியாக பயணிப்பதற்கு சிறந்த நாடிற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகில் தற்போது பெண்கள் அனைவரும் தனியாக பயணிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் பாதுகாப்பு கருதி தனியாக பயணிப்பதில் அச்சம் ஏற்படுகிறது.


கருத்தடை சாதனங்களை இலவசமாக்க உள்ள கனடா அரசு!
[Wednesday 2024-04-03 18:00]

கனடாவில் பெண்கள் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் முதலான அனைத்து கருத்தடை சாதனங்களும் இலவசமாக்கப்பட உள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. பெண்கள் தங்களுக்குத் தேவையான கருத்தடை சாதனங்களைப் பெற பணம் தடையாக இருக்கக்கூடாது, கருத்தடை முறைகளை அவர்கள் சுதந்திரமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.


பிரித்தானியாவில் சுகாதார தலைமையகத்தை முற்றுகையிட்ட பாலஸ்தீனிய சார்பு மருத்துவ ஊழியர்கள்!
[Wednesday 2024-04-03 18:00]

லண்டனில் உள்ள NHS இங்கிலாந்து தலைமையகத்திற்கு வெளியே பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரகர்கள் இன்று போராட்டம் நடத்தினர். இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Palantir-க்கு 330 மில்லியன் பவுண்டு ஒப்பந்தத்தை NHS இங்கிலாந்து வழங்கியது.


ரொறன்ரோவில் அவசரமாக நிறுவப்படும் தடுப்பூசி நிலையங்கள்!
[Wednesday 2024-04-03 18:00]

கனடாவின் ரெறான்ரோவில் அவசரமாக தடுப்பூசி நிலையங்கள் நிறுவப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குரங்கம்மை நோய்த் தாக்கம் காரணமாக இவ்வாறு அவசரமாக தடுப்பூசி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.


கட்டண உயர்வு இல்லை: துபாய் பாடசாலைகள் குழு அறிவிப்பு!
[Wednesday 2024-04-03 06:00]

துபாய் கல்வித்துறை கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்துள்ள நிலையிலும், புதிய கல்வியாண்டில் கட்டண உயர்வு இருக்காது என்றே துபாய் பாடசாலைகள் குழு அறிவித்துள்ளது. துபாய் கல்வித்துறையான KHDA செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், 5.2 சதவிகிதம் வரையில் கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்திருந்தது. 2024 மற்றும் 2025 கல்வியாண்டில் அமுலுக்கு கொண்டுவரவும் அனுமதி அளிக்கப்பட்டது.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா