Untitled Document
April 27, 2024 [GMT]
சாவகச்சேரியில் தப்பியோடிய கைதிகள்- 30 நமிடங்களில் துரத்திப் பிடித்த பொலிஸ்!
[Thursday 2024-04-18 05:00]

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதிகள் சுமார் 30 நிமிட இடைவெளியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்!
[Wednesday 2024-04-17 16:00]

அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


குழந்தையின் மீது கத்தியை வைத்து மிரட்டி தாயின் நகைகள், மோட்டார் சைக்கிள் கொள்ளை!
[Wednesday 2024-04-17 16:00]

வவுனியா நகரில் தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயை, மூவர் அடங்கிய கும்பல் வழிமறித்து, குழந்தையின் மீது கத்தியை வைத்து மிரட்டி நகைகளையும், மோட்டார் சைக்கிளையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.


திருநெல்வேலியில் விபத்து - இளைஞன் காயம்!
[Wednesday 2024-04-17 16:00]

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதிய விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.


சுதந்திரக் கட்சியில் புதிய நியமனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவில் ஆட்சேபனை!
[Wednesday 2024-04-17 16:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், கட்சியின் பதில் பொதுச் செயலாளரால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டுள்ளது.


கோட்டாவின் 10 கோடி ரூபா வாகனம் மொடல் அழகி பியூமியிடம் வந்தது எப்படி?
[Wednesday 2024-04-17 16:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னர் பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் வாகனத்தை மொடல் அழகி பியூமி ஹன்சமலி பயன்படுத்துவது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி எனது நாடு அமைப்பின் தலைவர் சஞ்சய மஹவத்த இன்று சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.


தனக்குத் தானே புதைகுழி வெட்டிய தெவரப்பெரும! - அங்கேயே சனியன்று அடக்கம்.
[Wednesday 2024-04-17 16:00]

மறைந்த பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


யாழ்ப்பாணத்தில் விஷ பூச்சி கடித்ததால் ஒருவர் மரணம்!
[Wednesday 2024-04-17 16:00]

யாழ்ப்பாணத்தில் காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி கடித்த ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 52 வயதுடைய சண்முகவேல் அருட்செல்வம் என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.


டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு சரிவு!
[Wednesday 2024-04-17 16:00]

கடந்த காலாண்டு முழுவதும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது சிறிய அளவு சரிவை சந்தித்துள்ளது. நேற்றைய இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.


சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம்!
[Wednesday 2024-04-17 16:00]

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


திருமணமாகி ஒரே மாதத்தில் காணாமல்போன கணவன்! - மனைவி முறைப்பாடு.
[Wednesday 2024-04-17 16:00]

தனது கணவனை கடந்த 12 ஆம் திகதி முதல் காணவில்லை என மனைவி நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி மரணம்!
[Wednesday 2024-04-17 05:00]

முன்னாள்‌ இராஜாங்க அமைச்சர் பாலித தெவரபெரும மின்சாரம் தாக்கி மரணமானார். வீ மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.


வெடுக்குநாறி மலை அட்டூழியங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
[Wednesday 2024-04-17 05:00]

சிவராத்திரி தினத்தன்று, வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை விசாரணைகளை முன்னெடுத்தது. குறித்த விசாரணையில் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள், மற்றும் ஆலயத்தின் செயலாளர், பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.


சிங்கள வேட்பாளர்களை நம்பவும் முடியாது, தேர்தலைப் புறக்கணிக்கவும் முடியாது!
[Wednesday 2024-04-17 05:00]

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பொதுவாகச் சிந்தித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.


சுற்றுலாவியிடம் 1900 ரூபாவுக்கு கொத்து ரொட்டி விற்க முயன்றவர் கைது!
[Wednesday 2024-04-17 05:00]

கொழும்பு - புதுக்கடை பகுதியில் உள்ள வீதியோர உணவகமொன்றில் வெளிநாட்டவரை ஏமாற்றி, கொத்து ரொட்டி பார்சலை 1900 ரூபாவுக்கு விற்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


வெளிநாடுகளுக்குப் பறந்த அமைச்சர்கள், எம்.பிக்கள்!
[Wednesday 2024-04-17 05:00]

இருபதிற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தற்போது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலர் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். மேலும் சிலர் வெளிநாடுகளில் கல்வி கற்கும் தமது பிள்ளைகளை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அனைத்து அரசியல் கட்சிகளையும் கைகோர்க்குமாறு அழைக்கிறது ஐதேக!
[Wednesday 2024-04-17 05:00]

கட்சி அரசியலை மறக்க வேண்டிய தருணம் இது என்பதை வலியுறுத்தி, நிலையான நாட்டை உருவாக்குவதற்கு கைகோர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இன்று அழைப்பு விடுத்துள்ளது.


வெளிநாட்டில் இருந்து வந்தவருடன் சேர்ந்து பொலிசாரால் தாக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதி!
[Wednesday 2024-04-17 05:00]

வெளிநாட்டில் இருந்து வந்துள்ள ஒருவருடன் சேர்ந்து புளியங்குளம் பொலிசார் தன்னை தாக்கியதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றது. வவுனியா சின்னப்பூவரசங்குளத்தை சேர்ந்த ஒருபிள்ளையின் தந்தையே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இன்று தொடக்கம் புதிய வீசா நடைமுறை!
[Wednesday 2024-04-17 05:00]

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய வீசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை இன்று முதல் ஆரம்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.


சர்வோதய நிறுவுநர் ஆரியரத்ன காலமானார்!
[Wednesday 2024-04-17 05:00]

சர்வோதய அமைப்பின் நிறுவுநர் கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன நேற்றுக் காலமானார். 92 வயதான இவர் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வவுனியா வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல்! - ஒருவர் காயம்.
[Wednesday 2024-04-17 05:00]

வவுனியா பொது வைத்தியசாலையின் காவலாளிகள் மீது இளைஞர் குழு ஒன்று திங்கட்கிழமை இரவு தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பொதுவேட்பாளராக வேலன் சுவாமிகள்! - பதிலளிக்க காலஅவகாசம் கோரினார்.
[Tuesday 2024-04-16 15:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு தவத்திரு வேலன் சுவாமிகள் கால அவகாசம் கோரியுள்ளார்.


வெள்ளியன்று வவுனியாவில் கூடுகிறது தமிழரசின் மத்திய செயற்குழு!
[Tuesday 2024-04-16 15:00]

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் - பிரதமரை தலையிடுமாறு கஜேந்திரன் கடிதம் !
[Tuesday 2024-04-16 15:00]

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.


தமிழர்களை பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்துவது எதிர்காலத்தை அழிவுக்குள் தள்ளும்!
[Tuesday 2024-04-16 15:00]

தமிழர்களை தொடர்ந்தும் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி செய்ய முற்படும் அரசியல் நாட்டின் எதிர்காலத்தை மேலும் அழிவுக்குள்ளேயே தள்ளும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.


காதலியையும் தாயையும் வெட்டி விட்டு இளைஞன் உயிரை மாய்ப்பு!
[Tuesday 2024-04-16 15:00]

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு , பனிப்புலம் பகுதியில் இன்று அதிகாலை தனது காதலியையும், காதலியின் தாயையும் கூரிய ஆயுதத்தால் வெட்டிய இளைஞன் ஒருவர், தனது உயிரை மாய்த்துள்ளார் .


இராஜாங்க அமைச்சருடன் சென்ற கார் தீப்பற்றி எரிந்தது!
[Tuesday 2024-04-16 15:00]

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த கார் பண்டாரவளை - ஹல்பே பகுதியில் வைத்து இன்று அதிகாலை 12.45 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


ரஷ்ய போரில் இலங்கை இராணுவத்தினர் - விபரங்களை கோருகிறார் இலங்கை தூதுவர்!
[Tuesday 2024-04-16 15:00]

ரஷ்ய இராணுவத்தில் இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் இணைந்திருந்தால் அவர்கள் பற்றிய விவரங்களை தருமாறு மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா லியனகே, கேட்டுள்ளார்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா