Untitled Document
May 13, 2024 [GMT]
பிரகீத் கடத்தல்- ஏழு ஊடகவியலாளர்களிடமும் விசாரணை!
[Sunday 2016-01-10 08:00]

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏழு ஊடகவியலாளர்களிடம் குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எக்னெலிகொடவுடன் பணிபுரிந்த ஊடகவியலாளர்களிடமே விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


இலங்கைக்கு நிதியுதவிகளைத் திறந்து விடுகிறது அமெரிக்கா
[Sunday 2016-01-10 08:00]

இலங்கைக்கு பாரியளவில் அபிவிருத்தி உதவிகளை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கைக்கு அபிவிருத்தி உதவியாக 80 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. நீண்ட இடைவெளியின் பின்னரே இலங்கைக்கு, அபிவிருத்தி உதவிகளை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட உள்ளது.


அடுத்தமாத நடுப்பகுதிக்குள் இலங்கை வருகிறார் சுஸ்மா! - யாழ்ப்பாணமும் செல்வார்.
[Sunday 2016-01-10 08:00]

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அடுத்த மாத நடுப்பகுதிக்குள் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி இந்திய


அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? - சிவில் சமூகத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி
[Sunday 2016-01-10 08:00]

ஜெனீவா தீர்மானத்தில் கடந்த ஆண்டு அளித்திருந்த உத்தரவாதங்களை இலங்கை அரசாங்கம் புதிய ஆண்டில் நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை வலியுறுத்தி சிவில் அமைப்புகளுடன் மனித உரிமை ஆர்வலர்கள் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


மைத்திரி, ரணில் யாழ். வருகைக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்! - சிவாஜிலிங்கம் அறிவிப்பு
[Sunday 2016-01-10 08:00]

தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் யாழ்ப்பாணம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புகொடி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது. ஆனால் இந்த ஆட்சி காலமும் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே கொடுத்திருக்கின்றது குறிப்பாக அரசியல் கைதிகளுடைய விடுதலையை சரியாக நிறைவேற்றவில்லை.


சிங்க லேயை தடுக்காவிடின் புலி இரத்தமும் உருவாகும்! - ஊடக அமைப்பு எச்சரிக்கை
[Sunday 2016-01-10 08:00]

நாட்டில் தற்போது இனநல்லிணக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயல்படும்


இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நாளை மறுநாள் கொழும்பு வருகிறார்!
[Sunday 2016-01-10 08:00]

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், ஒருநாள் பயணமாக நாளை மறுநாள் இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் 12ம் திகதி மாலைதீவிலிருந்து கொழும்பு வரும் அவர், அரச உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் வெளிவிவகாரச் செயலர் சித்ராங்கனி வகீஸ்வரா ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளார்.


செல்வாவுடனான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்கமாட்டார்! - ஜனாதிபதி மைத்திரி Top News
[Saturday 2016-01-09 19:00]

டட்லி - செல்வா மற்றும் பண்டா - செல்வாம் ஒப்பந்தங்கள் அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் பிரபாகரன் என்று ஒருவர் உருவாகி இருக்கமாட்டார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்ற விசேட உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


போதைப்பொருட்கள் குறித்து அவதானமாக இருங்கள்! - மன்னாரில் முதலமைச்சர் அறிவுரை Top News
[Saturday 2016-01-09 19:00]

அவசர உலகத்தில் திடீர் பணக்காரர்களாக வருவதற்கே விரும்புகின்றார்கள் இவ்வாறு தெரிவித்தார் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். இன்று மன்னாரில் எருக்கலம்பிட்டி பாடசாலையில் தொழிநுட்ப கூட கட்டடங்களை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


கொலை செய்யப்பட்ட இராணுவச் சிப்பாயின் சடலத்தை கண்டுபிடிக்க விசுவமடுவில் அகழ்வு! Top News
[Saturday 2016-01-09 19:00]

விசுவமடு மகாவித்தியாலயத்திற்கு பின் பகுதியில் உள்ள காணியில் இன்று அகழ்வுப் பணிள் இடம்பெற்றது. 2010ஆம் ஆண்டு விசுவமடு இராணுவ முகாமில் கடமையாற்றிய சிப்பாய் ஒருவர் சக வீரர் ஒருவரால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்திலேயே இவ் அகழ்வு பணி இடம்பெற்றது. இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள பகுதியிலேயே இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.


[Saturday 2016-01-09 19:00]


மன்னார் ஆயரைச் சந்தித்தார் முதலமைச்சர்! Top News
[Saturday 2016-01-09 19:00]

வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று மன்னார் மறைமாவட்ட ஆயரை மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்தார். மன்னார் எருக்கலம்பிட்டி பாடசாலையில் தொழிநுட்ப பீடத்தை திறந்து வைத்த பின் ஆயர் இல்லம் சென்ற வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆயரை சந்தித்து சுகம் விசாரித்தார்.


பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இராணுவம் ஒருபோதும் அனுமதிக்காது! - இராணுவத் தளபதி
[Saturday 2016-01-09 19:00]

இலங்கையில் எந்தவிதமான பயங்கரவாத அச்சுறுத்தலும் இல்லை என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடுகையில் இராணுவ தளபதி இதனைத் தெரிவித்துள்ளார்.


சரத் பொன்சேகாவின் இணையத்தளத்தை முடக்கிய ஐஎஸ் தீவிரவாதிகள்! Top News
[Saturday 2016-01-09 19:00]

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சியினால் நடத்தப்படும் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றுமாலை இடம்பெற்ற இந்த சைபர் தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயல் என சந்தேகிக்கப்படுகின்றது. லங்கா இஸட் நியூஸ் என்ற இந்த இணையத்தளத்தின் முகப்பு பகுதிக்கு பிரவேசிக்கும் போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடியும் பிரசார வாசகங்களும் காணப்படுகின்றன.


கைது செய்யப்பட்ட ஹிருணிகா பிணையில் விடுவிப்பு! Top News
[Saturday 2016-01-09 19:00]

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நண்பகல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஹிருணிகா முற்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தெமட்டகொட பகுதியில் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று காலை ஹிருணிகா கைது செய்யப்பட்டிருந்தார்.


முள்ளிவாய்க்காலில் நினைவாலயம் அமைக்க வட மாகாணசபையினால் குழு அமைப்பு!
[Saturday 2016-01-09 19:00]

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தை அந்த நினைவாலயத்தில் அனுஷ்டிக்கும் உறுதியுடன் முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என நினைவாலய அமைப்புப் பணிக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வட மாகாண சபை பிரதி அவைத் தலைவர் ம.அன்டனி ஜெயநாதன், தெரிவித்தார்.


செந்தூரன் வீட்டில் பொதுமன்னிப்பில் விடுதலையான ஜெனிகன்! Top News
[Saturday 2016-01-09 19:00]

மாணவன் செந்தூரன் போன்றோரது உயிர்த் தியாகங்கள் மூலம் ஏற்படும் சிறை மீட்பு தொடர்ந்தும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் என, ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதி சிவராஜா ஜெனிகன் தெரிவித்தார்.


14 வயது பாடசாலை மாணவியுடன் குடும்பம் நடத்திய இளைஞர் கைது!
[Saturday 2016-01-09 19:00]

பாடசாலை செல்லும் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய பருத்தித்துறை, கற்கோவளம் புனித நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பொ.சுப்பிரமணியம், உத்தரவிட்டார். அத்துடன், சிறுமியை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.


முள்ளிவாய்க்கால் குண்டுவெடிப்பில் குடும்பஸ்தர் படுகாயம்!
[Saturday 2016-01-09 19:00]

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கில் இன்று பிற்பகல் குண்டொன்று வெடித்ததில் குடும்பஸ்தர் படுகாயமடைந்தார். வீட்டு முற்றத்தைப் பெருக்கி குப்பைக்கு தீவைத்த போது, நிலத்தினுள் புதைந்து கிடந்த குண்டே வெடித்துள்ளது. சம்பவத்தில் 52 வயதான தம்பையா சிறிகாந்தா (சிறி) என்பவர் படுகாயமடைந்துள்ளார். அவர், பொதுமக்களின் உதவியுடன் முல்லைத்தீவு மாஞ்சோலை அரசினர் வைத்தியசாலை அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மஸ்கெலியா தோட்டத்தில் தொழிலாளர்களின் 16 குடியிருப்புகள் தீயில் நாசம்! Top News
[Saturday 2016-01-09 19:00]

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகின. இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் இந்த வீடுகளில் குடியிருந்த 16 குடும்பங்களை சேர்ந்த 80இற்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகமாக ஆலய மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


போரின்போது மேற்கொண்ட குற்றங்களை மறைக்க முடியாது! - கோபாலகிருஷ்ண காந்தி Top News
[Saturday 2016-01-09 09:00]

மஹிந்த ராஜபக்‌ஷ புலிகளுடனான போரில் வென்றிருக்கலாம் ஆனால் போரின்போது மேற்கொண்ட குற்றங்களை மறைக்க முடியாது. இந்த வெற்றியின் மூலம் துப்பாக்கிகள் மௌனமாகிய அதேநேரம் சமாதானப் பேச்சுக்களும் மெளனமாகி விட்டன என்று தெரிவித்துள்ளார் மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி.


அதிகாரம் அற்ற எந்த தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம்! - சம்பந்தன்
[Saturday 2016-01-09 08:00]

தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வைத் தரும் சபையாக பாராளுமன்றம் அமையவுள்ளதோடு தீர்வைத்தரும் ஆண்டாக இவ்வருடம் அமைய வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார்.


சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சி! - மஹிந்த ராஜபக்‌ஷ
[Saturday 2016-01-09 08:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தன்னை வெளியேற்றுவதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது என்றும், ஓய்வுபெறுமாறு சிலர் வலியுறுத்துகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. தலதா மாளிகைக்குச் சென்றிருந்த மஹிந்த ராஜபக்‌ஷ வழிபாடு முடிவடைந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.


அரசியல் தீர்வுக்கு ஒத்துழைக்க ஐ.நா தயார்! - இலங்கைக்கான விதிவிடப் பிரதிநிதி
[Saturday 2016-01-09 08:00]

நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு காணும் முயற்சிகள், மீள்குடியேற்றம் மற்றும் காணிகள் விடுவிப்பு போன்ற அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஐ.நா தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுபினை நத்தி உறுதியளித்தார்.


மோசடிகள் குறித்து கேள்வி கேட்கவேயில்லை! - என்கிறார் கோத்தபாய
[Saturday 2016-01-09 08:00]

பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அடிக்கடி அழைக்கப்படுகின்ற போதும் மோசடி தொடர்பில் இன்னும் தன்னிடம் விசாரணை செய்யப்படவில்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 'இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. நேற்றும் பல மணிநேரம் விசாரணை செய்யப்பட்ட போதும் ரக்ன லங்கா நிதி மோசடி தொடர்பில் எதுவும் கேட்கப்படவில்லை.


விக்னேஸ்வரனுக்குத் தைரியம் கொடுத்திருக்கிறது நல்லாட்சி அரசு! - விமல் வீரவன்ச
[Saturday 2016-01-09 08:00]

இராணுவத்தினரை வடிகானை சுத்தம் செய்யக் கூறும் அளவிற்கு வட மாகாண முதலமைச்சருக்கு நல்லாட்சி அரசாங்கம் பலத்தை வழங்கியுள்ளதாக விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு நேற்றுடன் ஒராண்டு பூர்த்தி அடைக்கின்ற நிலையில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


ஹிருணிகா இன்று கைது செய்யப்படுவார்? - சட்டமா அதிபர் பரிந்துரை
[Saturday 2016-01-09 08:00]

ஹிருனிகா பிரேமசந்திரவை கைது செய்வதற்கு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹிருனிகாவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


இன்று அரசியலமைப்பு சபையாக மாறுகிறது பாராளுமன்றம்!
[Saturday 2016-01-09 08:00]

முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. முழுநாள் விவாதத்தின் பின்னர் இந்த பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்ட பின்னர் மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு புதிய அரசியலமைப்பொன்றை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா