Untitled Document
May 20, 2024 [GMT]
நாடாளுமன்றத்துக்குள் பெண் எம்.பிக்களுக்கு பாலியல் தொல்லை!
[Monday 2016-01-18 18:00]

தாம் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதாக இரு பிரதான கட்சிகளின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சி தலைமையிடம் முறையிட்டுள்ளனர். மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாம் நாடாளுமன்ற வளாகத்தினுள்ளேயே இவ்வாறான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். அண்மையில் நாடாளுமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தமது கையை பிடித்ததாகவும், தவறாக பார்த்ததாகவும் தமது கட்சி மேலிடத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.


நிரந்தர அதிபர், ஆசிரியர் கோரி ஆரையம்பதியில் ஆர்ப்பாட்டம்! Top News
[Monday 2016-01-18 18:00]

மட்டக்களப்பு - ஆரையம்பதி மாவிளங்குதுறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நிரந்தர அதிபர் மற்றும் ஆங்கில ஆசிரியர் நியமனத்தை வலியுறுத்தியும் பாடசாலையை அபிவிருத்தி செய்யுமாறு கோரியும் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


குவைத்துக்கு பணிப்பெண்ணாகச் சென்ற கிளிவெட்டி இளம் பெண் மர்ம மரணம்?
[Monday 2016-01-18 18:00]

குவைத்துக்குப் பணிப்பெண்ணாகச் சென்ற இளம்பெண்ணொருவர் விபத்தில் மரணமடைந்ததுடன், அவரை அடக்கம் செய்து விட்டதாக வந்த குறுஞ்செய்தி தொடர்பில் சேருநுவர பிரதேச செயலகத்திலும் திருகோணமலையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திலும் இன்று உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். கிளிவெட்டி, அரியமாங்கேணியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான சுரேஷ்வரன் யோகவதனி (வயது 25) என்ற இப்பெண், வறுமை காரணமாக 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி குவைத்துக்கு பணிப்பெண்ணாகச் சென்றார்.


களுத்துறை தைப்பொங்கல் கொண்டாட்டங்களில் ஜனாதிபதி மைத்திரி! Top News
[Monday 2016-01-18 18:00]

பாடசாலை மாணவர்கள் மத்தியில் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதற்கு சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளைப் பயன்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த 2016ஆம் ஆண்டு தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் களுத்துறை பயாகலை இந்து கல்லூரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, ஏ.எச்.எம். பௌசி, மகிந்த சமரசிங்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


திருகோணமலையில் வயல் காவலுக்குச் சென்றவர் ஆற்றில் சடலமாக மீட்பு! Top News
[Monday 2016-01-18 18:00]

வயலுக்கு காவலுக்குச் சென்றவர் திருகோணமலை, கொட்டியாவப் பகுதியில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். திரியாய்-05ஆம் வட்டாரம், சோலையடியைச் சேர்ந்த 06 பிள்ளைகளின் தந்தையான செல்லத்தம்பி சண்முகராசா (வயது 57) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 16ஆம் திகதி கட்டுக்குளம் பகுதியிலுள்ள வயலுக்கு காவலுக்குச் சென்ற மேற்படி நபர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் பொலிஸில் குறித்த வயல் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.


புதிய அரசியல் அணிக்குத் தலைமையேற்கிறார் கோத்தபாய?
[Monday 2016-01-18 18:00]

கூட்டு எதிரணி உறுப்பினர்கள் குழுவினால் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்ற புதிய முன்னணிக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த முன்னணியின் தலைமை பொறுப்பை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொள்வதற்கு மறுக்கும் பட்சத்திலேயே, அப்பதவியை கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.


சிங்களவர்களுக்கு கொடுக்கப்படும் தமிழர்களின் வயல் நிலங்கள்! - முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் Top News
[Monday 2016-01-18 18:00]

முல்லைத்தீவு, மாவட்டத்தில் கொக்குளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய கிராம மக்கள், தமது பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவதாக தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை மேற்கொண்டனர். முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அருகில் ஆரம்பித்த இப்பேரணி, பிரதான வீதி ஊடாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்தது. இதன்போது,பேரணியில் கலந்துகொண்டோர், முல்லைத்தீவு மாவட்ட மேலதிகச் செயலாளர் சி.ஏ.மோகன்ராஜிடம் மனுவொன்றை கையளித்தனர்.


அதிகாரப் பகிர்வு, அரசியலமைப்பு மாதிரிகள் குறித்து வட மாகாணசபை உறுப்பினர்களுக்கு கருத்தரங்கு! Top News
[Monday 2016-01-18 18:00]

சுவிஸ் மற்றும் தென்னாபிரிக்க நாடுகளின் அரசியலமைப்பு நிபுணர்கள் இன்று வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு, ஒன்றை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று நடத்தினர். பேராசிரியர் நவரத்ன பண்டார தலைமையிலான அரசியலமைப்புக் கற்கை நிறுவனமும், சுவிட்ஸலாந்தின் பிறிபோக் பல்கலைக்கழகமும் இணைந்து இந்தக் கருத்தரங்கை ஒழுங்கு செய்தன.


வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த லொறி மீது மோதியது யாழ் -கொழும்பு சொகுசு பஸ்! - ஒருவர் பலி, எட்டுப்பேர் காயம் Top News
[Monday 2016-01-18 18:00]

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த நெல் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். 8 பேர் காயமடைந்தனர். வவுனியா - ஈரப்பெரியகுளம் - கல்குண்டான் மடுவில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்துக் குறித்து மேலும் அறியவருவதாவது:


காணாமற்போனவர்கள் குறித்த ரணிலின் கருத்துக்கு மன்னார் பிரஜைகள் குழு கண்டனம்!
[Monday 2016-01-18 07:00]

போர்க்காலத்தில் காணாமல்போனவர்களில் பலர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் உரையாற்றியபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ள கருத்தை மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு கண்டித்துள்ளது.


வெளிநாட்டு நீதிபதிகள்
[Monday 2016-01-18 07:00]

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அர சாங்கம் உள்ளக விசாரணைப் பொறிமுறை கட்டமைப்பை வடிவமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் கலந்துரையாடல்களும் இம்மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் விரைவில் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரியவருகிறது.


புதிய அரசியலமைப்பு 13ஐத் தாண்டக் கூடாது - முட்டுக்கட்டை போடுகிறார் மஹிந்த!
[Monday 2016-01-18 07:00]

புதிய அரசியலமைப்பினூடாக அதிகாரப் பரவலாக்கலானது எக் காரணம் கொண்டும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்வதாக இருக்கக்கூடாது. அத்துடன் மாகாணங்களை இணைப்பதாகவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.


ஒற்றையாட்சியில் அதிகாரங்களைப் பகிரத் தடையில்லையாம்! - விஜேதாச ராஜபக்ச சொல்கிறார்
[Monday 2016-01-18 07:00]

ஒற்றையாட்சி முறைமையின் ஊடாக முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு செல்வதற்கு எவ்விதமான தடைகளும் இல்லைஎன்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்கமுடியாது. அது இந்த நாட்டு மக்களினால் தீர்மானிக்கப்படவேண்டிய விடயமாகும்.


இன்று சுவிஸ் பயணமாகிறார் ரணில்!
[Monday 2016-01-18 07:00]

சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சுவிட்சர்லாந்து செல்லவுள்ளார். பிரதமருடன் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் சுவிட்சர்லாந்து செல்கின்றனர். இந்த மாநாடு எதிர்வரும் 20 முதல் 23 ஆம் திகதி வரையில் சுவிஸர்லாந்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச பொருளாதார மாநாட்டிற்கு வரலாற்றில் முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இம்முறை சுதந்திர தின விழா காலிமுகத் திடலில்!
[Monday 2016-01-18 07:00]

இலங்


மகிந்தவின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை வேறிடத்துக்கு மாற்றக் கோருகிறது தந்தை செல்வா அறங்காவலர் குழு! Top News
[Monday 2016-01-18 07:00]

தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள, வீதி புனரமைப்பு தொடர்பான மகிந்த ராஜபக்சவின் பெயர் பொறித்த நினைவுக் கல்லை வேறிடத்துக்கு மாற்றுமாறு தந்தை செல்வா அறங்காவல் குழு, வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு யாழ். காங்கேசன்துறை வீதி புனரமைப்பு செய்யப்பட்ட போது இந்த நினைவுக் கல் அமைக்கப்பட்டது.


அம்பாறையில் சுதந்திரக் கட்சியினர் பெரும்பாலானோர் மஹிந்தவுக்கு ஆதரவு!
[Monday 2016-01-18 07:00]

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகள் மஹிந்த ராஜபக்ஷகவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவே செயல்படுவது என அம்பாறை மாவட்டத்திலுள்ள சிங்கள பிரதேச உள்ளுராட்சி சபைகளின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவர்களும் உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.


இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனப் போர்க்கப்பல்கள் கொழும்பு வந்தன!
[Monday 2016-01-18 07:00]

சீனாவின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன. இந்தியாவின் அதிருப்திக்கு மத்தியில் இந்தக் கப்பல்கள் நேற்றுக் கொழும்பை வந்தடைந்துள்ளன. குறித்த மூன்று கப்பல்களையும் இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். நல்லெண்ண விஜயமாக வந்துள்ள இந்த மூன்று கப்பல்களும் எதிர்வரும் வியாழக்கிழமை வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கும். இந்திய அரசாங்கத்தின் அதிருப்தியை அடுத்து இலங்கையின் புதிய அரசாங்கம் சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல்கள் வருவதற்கு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


மஹிந்த
[Monday 2016-01-18 06:00]

மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையிலான பேச்சுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான அடிப்படை செயற்பாடுகளை அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க முன்னெடுத்து வருகின்றார். எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர் தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறவேண்டும் என்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து பணியாற்றவேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பிளர்கள் தெரிவித்துவருவதாகவும் கூறப்படுகின்றது.


மயிலிட்டித் துறைமுகத்தை விடுவிக்க அரசாங்கம் மறுப்பு! Top News
[Sunday 2016-01-17 19:00]

யாழ்ப்பாணத்தில் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்களின் பயன்பாட்டுக்கு விடுவிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். பலாலி படைத்தலைமையகத்தில் நேற்றுமுன்தினம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த உயர்மட்டப் பாதுகாப்பு மாநாட்டில், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை படையினர் விடுவிக்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.


அரசியல் கைதிகள் விவகாரம் சரியாக கையாளப்படவில்லை! - சட்டத்தரணி கே.வி. தவராசா
[Sunday 2016-01-17 19:00]

அரசியல் கைதிகளின் விவகாரம் சரியான முறையில் கையாளப்படவில்லை என சட்டத்தரணி கே.வி. தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு சுமூகமான சூழல் நிலவுகின்ற நிலையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசியல் ரீதியான அணுகுமுறை மற்றும் சட்ட ரீதியான அணுகுமுறை என இரண்டு வழிமுறைகள் காணப்பட்டன.


நாட்டை பிரிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்! - ரணில்
[Sunday 2016-01-17 19:00]

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதம் சீர்குலையப் போவதில்லை என்றும் நாட்டைப் பிரிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக இன்று காலை அலரி மாளிகையில் விஷேட உரை நிகழ்த்தியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


நாடு பிளவுபடப் போவதாக மக்களைத் தூண்ட சிலர் முயற்சி! - நிமால் சிறிபால டி சில்வா
[Sunday 2016-01-17 19:00]

நாட்டை பிளவுபடுத்த போகிறார்கள் என்று கூறி சிலர் மக்களை தூண்ட முயற்சிப்பதாகவும் அவர்களை விட சுதந்திரக் கட்சியினர் தேசப்பற்றாளர்கள் எனவும் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,


ஜேர்மனிக்குச் செல்கிறார் ஜனாதிபதி மைத்திரி!
[Sunday 2016-01-17 19:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மனிக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி இந்தப் பயணம் ஆரம்பமாகும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஜேர்மனி விஜயத்தின் போதான சந்திப்புகள் தொடர்பான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு வேலைகளில் இலங்கை வெளிவிவகார அமைச்சும், ஜேர்மனி வெளிவிவகார அமைச்சும் ஈடுபட்டுள்ளன.


முதலமைச்சர் - ஆளும்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் சந்திப்பு நடக்கவில்லை!
[Sunday 2016-01-17 19:00]

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் வட மாகாணசபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் தொடர்பாக வடமாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களால் கடந்த 11ஆம் திகதி பொதுக் குழுக்கூட்டத்தின் போது கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்தக் கேள்விகளுக்கு இன்றும் பதிலளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.


இலங்கையை அபிவிருத்தி செய்வதில் வெளிநாடுகள் மத்தியில் போட்டி! - என்கிறார் ஜனாதிபதி
[Sunday 2016-01-17 19:00]

தற்போதைய நிலமையில் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்வதற்கு சர்வதேச நாடுகளுக்கிடையில் போட்டி நிலவுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். பொலன்னறுவை நகரத்தின் சுற்றுவட்டப் பாதையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.


ஜெய்சங்கரின் பயணத்தை அடுத்து பாகிஸ்தான் போர் விமானக் கொள்வனவை நிறுத்தியது இலங்கை!
[Sunday 2016-01-17 19:00]

இந்திய வெளியுறவு செயலாளர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தை அடுத்தே பாகிஸ்தானிடம் இருந்து ஜேஎப் 17 ரக விமானங்கiளை கொள்வனவு செய்வதில்லை என்று இலங்கை, முடிவெடுத்ததாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து இலங்கை, 400 மில்லியன் டொலர்கள் பெறுமதியில் 10 ஜேஎப் விமானங்களை கொள்வனவு செய்யவிருந்தது.


மன்னார் மாவட்ட புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேசாலையில் முதற் திருப்பலி! Top News
[Sunday 2016-01-17 19:00]

மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அப்போஸ்தலிக்க பரிபாலகரான, ஓய்வுபெற்ற ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை இன்று மன்னார் - பேசாலை கிராமத்திலுள்ள புனித வெற்றி நாயகி ஆலயத்தில் முதல் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். திருப்பலி நிறைவுற்றதும், பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய அருட்பணிப் பேரவை அங்கத்தவர்களை சந்தித்தார். சந்திப்பில் ஆன்மீகம், சமூகம் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா