Untitled Document
May 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தென்னியங்குளம் பாடசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு! Top News
[Sunday 2024-01-21 08:00]

அமரர் கனகாம்பிகை கனகசுந்தரம் அவர்களின் 02ஆண்டு நினைவு நாளில் “எர் நிலம்” தொண்டமைப்பின் ஊடாக… கற்றல் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும்,பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கனகாம்பிகை கனகசுந்தரம் அவர்கள் இறைபாதமடைந்து 02ஆம் ஆண்டு நினைவு தினமான 19.01.2024 இன்று அன்னாரின் குடும்பத்தினரின் 200,000/= நிதி பங்களிப்பில் “ஏர் நிலம்”அமைப்பின் ஊடாக "கல்வியே எங்கள் மூலதனம்" எனும் தொனிப்பொருளுடன் கற்றல் உபகரணங்களும்,மதிய உணவு வழங்கும் நிகழ்வும் தாயகத்தின் முல்லைத்தீவு/ துணுக்காய் தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது….

விருந்தினர்கள் வரவேற்ப்புடன் திருவுருவப் படத்திற்க்கு மலர்மாலை அணிவித்து,மலர்தூவி,நினைவுச் சுடரேற்றி சிறப்பு ஆத்மா சாந்தி பிராத்தனைகளுடன் மதப்பிரமுகர்களின் ஆசியுரை,நினைவுரைகள் இடம்பெற்று 113 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது…

பௌதிக வளங்கள் குறைந்த நிலையில் காணப்படும் முல்லைத்தீவு/தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. இப் பணியானது மிக நெருக்கடி நிலையில் வாழும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இப்பணி பெறும் ஆறுதலே. பாடசாலைச் சமூகம் இப் பெரும் உதவியை நல்கிய அமரர் கனகாம்பிகை கனகசுந்தரம் குடும்பத்தினர்கு நன்றியையும் பகிர்ந்து நின்றனர்.

மேற்படி நிகழ்வில் மதகுருமார்கள்,தென்னியன்குளம் கிராமசேவகர்,பாடசாலை அதிபர், ஆசிரயர்கள்,மாணவர்கள், பெற்றொர்கள்,மற்றும் ஏர் நிலத்தின் செயலாற்றுனர் படைபாளி தே.பிரியன் எர் நிலத்தின் செயலாற்றுனர் கவிஞர் முறிகண்டி லக்சிதரன் ஆகியோர் கலந்து நினைவுகூரல் நிகழ்வுடன்,கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வையும் சிறப்பித்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா