Untitled Document
May 6, 2024 [GMT]
தாக்குதல்தாரிகளும், தாக்குதலை தடுக்கத் தவறியவர்களும் கூட்டாக சேர்ந்து செயற்பட்டனரா?
[Friday 2024-04-26 08:00]

வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சஹ்ரான் தரப்பினரால் கொல்லப்பட்ட போது அதன் விசாரணைகள் ஏன் வேறு பக்கத்திற்கு திருப்பப்பட்டன? எனக்கேள்வி எழுப்பிய ஜே .வி.பி தலைவரும்,எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க தாக்குதல்தாரிகளும் தாக்குதலை தடுக்கத் தவறியதாக கூறப்படும் தரப்பினரும் கூட்டாக இணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தினரா என்ற சந்தேகங்கள் உள்ளதாகவும் கூறினார்.

வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சஹ்ரான் தரப்பினரால் கொல்லப்பட்ட போது அதன் விசாரணைகள் ஏன் வேறு பக்கத்திற்கு திருப்பப்பட்டன? எனக்கேள்வி எழுப்பிய ஜே .வி.பி தலைவரும்,எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க தாக்குதல்தாரிகளும் தாக்குதலை தடுக்கத் தவறியதாக கூறப்படும் தரப்பினரும் கூட்டாக இணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தினரா என்ற சந்தேகங்கள் உள்ளதாகவும் கூறினார்.

  

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

கடந்த 5 வருடங்களாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேகத்திற்கு இடமான விடயங்கள் பல நடந்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விவாதிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட காலப்பகுதியில் தொடர்ச்சியாக 9 நாட்கள் விவாதிக்கப்பட்டது. இருப்பினும் இன்று வரை நீதி கிடைக்கவில்லை. ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் சனல் -04 ஆவணப்படம் வெளியாகியுள்ளது, பிள்ளையான் புத்தகம் வெளியிட்டுள்ளார், பிரதான சூத்திரதாரியை நாங்கள் அறிவோம் என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுவதையும் அறிய முடிகிறது என்றார்.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் ராஜபக்ஷர்களின் அரசியல் செயற்பாடுகள் முஸ்லிம் அடிப்படைவாதம்,இஸ்லாமிய அடிப்படைவாதம்,சிங்கள இனத்துக்கு அச்சுறுத்தல் என்பதை மையப்படுத்தியிருந்தது.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இதன் உச்சகட்டமாகவே இருந்தது என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



கிளிநொச்சி டிப்போச் சந்தியில் பூங்கா அமைக்கும் இராணுவம்! ஜ முன்னணி எதிர்ப்பு.
[Monday 2024-05-06 16:00]

கிளிநொச்சி டிப்போ சந்தியில் யுத்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் சட்ட விரோதமாக இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.



வங்காள விரிகுாவில் உருவாகிறது தாழமுக்கம்?
[Monday 2024-05-06 16:00]

எதிர்வரும் 15ஆம் 16ஆம் திகதியளவில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஒரு தாழமுக்கம் உருவாகி, அது சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் உள்ளதாக ஓய்வுபெற்ற மூத்த மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.



3 மாதங்களில் 8200 கோடி ரூபா இலாபம்! - மின்கட்டணத்தை 20 வீதம் குறைக்க பரிந்துரை.
[Monday 2024-05-06 16:00]

மின்சார சபை கடந்த மூன்று மாதங்களில் ரூ. 8,200 கோடி இலாபம் ஈட்டியதால், பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதற்காக துறைசார் மேற்பார்வைக்கான பாராளுமன்றக் குழுவானது மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது.



தெல்லிப்பழையில் வீடியோ கேமுக்கு அடிமையான மகன் - தாயைக் கொலை செய்தாரா?
[Monday 2024-05-06 16:00]

யாழ். தெல்லிப்பழையில் உயிரிழந்த தாயாரை மகன் கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் கெனடி ஜஸ்மின் என்ற 37 வயது பெண் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.



ஆளுநர்களையும் ஊழியர்களையும் அடைத்து வைத்த வேலையற்ற பட்டதாரிகள் கைது!
[Monday 2024-05-06 16:00]

வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் உள்ளிட்ட மாகாண சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மாகாண சபை கட்டிட வளாகத்திற்குள் அடைத்து, நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



சுற்றுலாப் பயணிகள் வருகை திடீர் வீழ்ச்சி!
[Monday 2024-05-06 16:00]

இந்த ஆண்டு முதல் தடவையாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 200,000க்கு கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 148, 867 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) தற்காலிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



செங்கலடியில் நள்ளிரவில் கடைக்குள் புகுந்த பஸ்! - 5 பேர் காயம். Top News
[Monday 2024-05-06 16:00]

மட்டக்களப்பு - செங்கலடி பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



30.5 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!
[Monday 2024-05-06 16:00]

சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30.5 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் வவுனியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் வவுனியாவில் உள்ள பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் .



சரத் பொன்சேகா தொடர்பான சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்பு!
[Monday 2024-05-06 16:00]

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை மற்றும் அவர் வகிக்கும் பதவிகளில் இருந்து அவரை நீக்கி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த சீராய்வு மனுவை பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.



கிராம அலுவலர்கள் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!
[Monday 2024-05-06 16:00]

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் 2 நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்துள்ளார்.



யாழ்.சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய முடிவு!
[Monday 2024-05-06 04:00]

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.



சஜித்துக்கு தூது போனேனா?- கருணாகரம் மீது மனோ பாய்ச்சல்.
[Monday 2024-05-06 04:00]

“மனோ மூலம் தூது விடாது எம்மிடம் நேரடியாக சஜித் கூற வேண்டும்” என தமிழீழ விடுதலை இயக்க நண்பர் கோவிந்தன் கருணாகரம் எம்பி கூறி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என மும்முரமாக செயற்படும் உங்களுக்கு எதற்காக சஜித் தூது விட வேண்டும் என எனக்கு தெரியவில்லை. பொது வேட்பாளர் தொடர்பில் உறுதியான முடிவை எடுங்கள். முதலில் அதை செய்யுங்கள். அப்புறம் புறா விடு தூது, அன்னம் விடு தூது, மான் விடு தூது, தென்றல் விடு தூது என்பவைகளை பார்க்கலாம். சஜித்திடமும் பேசலாம்.



மா.க.ஈழவேந்தனுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி! Top News
[Monday 2024-05-06 04:00]

1956 இல் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்துத் தன் மத்திய வங்கி உயர் பணியைத் தூக்கியெறிந்த தன்மானத் தமிழன் மா.க.ஈழவேந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்றது.



கனடாவில் இன்று 'அறைகூவல்' - நீதிக்கான அழைப்பு!
[Monday 2024-05-06 04:00]

தமிழினப் படுகொலையை நினைவு கூர்வோம்.

திகதி: திங்கட்கிழமை, May 06, 2024

நேரம்: மாலை 7:00 மணி

முகவரி: 5637 Finch Ave E Unit 1, Scarborough, ON M1B 5K9



பசிலுக்கும் ரணிலுக்கும் இடையில் சுமுகமான பேச்சு!
[Monday 2024-05-06 04:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நேற்று முன்தினம் பிற்பகல் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றது.



மொட்டு பிரமுகருக்கு விரைவில் அமைச்சர் பதவி!
[Monday 2024-05-06 04:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக ஒருவர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரே இவ்வாறு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.



இலவச சுற்றுலா விசா- ஆராய நிபுணர் குழு.
[Monday 2024-05-06 04:00]

இலவச சுற்றுலா விசாக்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக இலங்கை அரசாங்கம் ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியுள்ளது.



பணத்துக்காக கட்சியை விஜயதாசவுக்கு விற்று விட்டார் மைத்திரி!
[Monday 2024-05-06 04:00]

பணத்துக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டிக் கொடுத்து விட்டார். ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ என அவரால் தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க முடியாது என சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.



முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
[Monday 2024-05-06 04:00]

நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



இந்தியாவில் இருந்து மீண்டும் முட்டை இறக்குமதி!
[Monday 2024-05-06 04:00]

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா