தமிழ் மரபுத் திங்கள் உருவான வரலாறு - (கனடா) Tamil heritage month Canada | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
April 27, 2024 [GMT]

தமிழ் மரபுத் திங்கள் உருவான வரலாறு - (கனடா) Tamil heritage month Canada Top News
[Wednesday 2020-01-01 07:00]

கனடா நாடானது குடிவரவாளரின் நாடாகும். பல நாடுகளில் இருந்து வருகை தந்து, எமக்கு முன்னர் இங்கு குடியேறிய பல இனக்குழுக்கள் கனடாவின் பெரும்பான்மைப் பண்பாட்டோடு இணைந்து, தமது அடையாளத்தையும் இழக்காமல், இருப்பைத் தக்க வைத்துள்ளன. அதே வேளையில் தமது மரபுகளையும் பேணி முன்னெடுக்கின்றன. அவ்வகையில் நாமும் நமது அடையாள இருப்புக்கான, எமது மரபுகளையும் பேண வேண்டும்.


  

2003ம் ஆண்டில் முதன் முதலாகக் கனடாத் தமிழ்க் கல்லூரியால் ரொரன்ரோ நகரை மையப்படுத்தித் தமிழ் மொழி வாரம் ஒழுங்கு செய்யப்பட்டது. ஓர் இனத்தின் உயிரின் இருப்பாக, ஆணிவேராக அமைந்திருப்பது அந்த இனத்தின் மொழியாகும். இந்த அடிப்படையில் தமிழ்மொழி வாரத்தின் முழக்கமாக 'தமிழின் வாழ்வே தமிழரின் வாழ்வு' என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது.

தமிழ்க் கல்வியை மழலையர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை கற்பிக்கும் வசதிகள் இருந்தும் தமிழ் மாணவரும் பெற்றோரும் தமிழ்க்கல்வி கற்பதில் பெருமளவில் அக்கறை எடுக்கவில்லை என்பதே கசப்பான உண்மையாக இருந்தது. எனவேஇ தமிழ்மொழி கற்பதை முன் நிறுத்துவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இந்தத் தமிழ் மொழி வாரத்தின் முதன்மை நோக்கமாகவிருந்தது. கனடியத் தமிழர்களிடையே இருக்கின்ற அமைப்புகள் ஒன்றிணைந்து 'தமிழ் மேம்பாட்டுக் கழகம்' என்ற பெயரில் அவையும் ஒன்று உருவாக்கப்பட்டது. அத்தோடு தமிழ் மொழி வாரத்தின் முக்கிய நோக்கமாகச் கனடாத் தமிழ்க் கல்லூரியும், ஏனைய கனடியத் தமிழ் நிறுவனங்களும் இணைந்து, கனடா வாழ் ஈழத் தமிழர்களின் கவனம் தமிழ்மொழி மேம்பாடு, தமிழ்க் கல்வி, தமிழியல் ஆய்வு போன்ற துறைகளில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ் மொழி வார நிகழச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டன.

தமிழ் மொழியைப் பல தலை முறைகளுக்கு நிலைத்து நிற்கச் செய்வதற்கும், மொழியின் மேம்பாட்டைத் திறன் மிக்க முறையில் கொண்டு செல்வதற்கும் கனடாவில் தமிழ் மொழிக் கல்வியைப் பரவலாக்கவும் வேண்டித் தமிழ்மொழி வாரத்தை ஆண்டு தோறும் கொண்டாடுவதெனவும் மேற் கூறிய நோக்கங்களை நிறைவேற்றவும் கீழ்வரும் உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன.

1. எங்கள் பிள்ளைகளைத் தமிழ் வகுப்பில் சேர்ப்போம்.

2. பெற்றோரும் பிள்ளைகளும் தமிழரிடையே தமிழிற் பேசுவதை உறுதி செய்வோம்.

3. நாம் அனைவரும் முடிந்த வரை பிறமொழி விலக்கித் தமிழைப் பயன்படுத்துவோம்.

4. எமது வாழ்வியலில் தமிழ் மொழிப் பண்பாட்டுக்கு முதன்மை அளிப்போம்.

5. தமிழ் நூல்களை விலை கொடுத்து வாங்கி வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம்.

6. தமிழ் கற்பது பற்றி நிலவும் ஐயங்களை நீக்குவோம்.

7. தமிழை முறையாகக் கற்பதில் நிலவும் குறைபாடுகளை அகற்றுவோம்.

8. பல்கலைக்கழக நுழைவுக்கு ஒரு பாடமாக தமிழ் மொழியைக் கற்க முடியும் என்னும் செய்தியைப் பரப்புவோம்.

9. தமிழியற் துறையைக் கனேடிய பல்கலைக் கழகத்தில் நிறுவுவதற்கு உழைத்து வரும் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவரை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உதவுவோம்.

10. நுண்கலைகள் பயிற்றுவிப்போர், தமிழ் மொழியைப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்போம்.

11. தமிழ்மொழி வார நிகழ்வுகளில் ஊக்கமுடன் பங்காற்றுவோம்.

12. தமிழ் இதழியலாளர், தமிழ்மொழி வாரச் சிறப்பிதழாகத் தமிழ் மொழி பற்றி அறிவூட்டும் ஆக்கங்களை வெளியிடுவதையும், தமிழ்த் தொலைக் காட்சிகள் அவற்றை ஒளிபரப்புவதையும், தமிழ் வானொலிகள் அவற்றை ஒலிபரப்புவதையும் உறுதி செய்வோம்.

13. கனடாவில் பெருந் தொகையான அதாவது 30,000 மாணவர்கள் தமிழ்மொழி கற்பதை உறுதிப்படுத்துவோம்.

இவ்வாறு தமிழ்மொழி வாரத்துக்கு உறுதி எடுக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கலை நிகழ்ச்சிகளும், கலந்துரையாடல்களும், பட்டிமன்றங்களும், அறிஞர்களின் கருத்தரங்குகளும், பல பெரியார்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், இசைவல்லுனர்கள் போன்றோரால் பல தரப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழ்மொழி வார முதல் நாள் நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகத் தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமதி. சிந்தியா பாண்டியன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஒவ்வொரு தைத் திங்களிலும் மாணவர், பெற்றோர் மத்தியில் தமிழர் மரபுகளைப் போற்றிப் பேணும் நடவடிக்கைகளைத் 'தமிழ் மொழி வாரம்' செய்தது. இதன் தொடர்ச்சியாக இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டின் இறுதியில் தமிழ்க் கல்வியை கற்பிக்கும் அமைப்பான அறிவகமும் இணைந்து 'தமிழ் மரபுத் திங்கள்' அமைப்பு உருவாக்கம் பெற்றது. இவ்வமைப்பு பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகும். இவ்வமைப்பானது வருவாய் நோக்கற்றதாகும். இதில் இப்போது பல அமைப்புகளும் இணைந்துள்ளன. தமிழ்மொழி வாரமானது, தமிழ் மரபுத் திங்கள் அமைப்பாக மாற்றம் பெற்றபின்னர், 2010இல் முதலாவது தமிழ் மரபுத் திங்கள் விழா பல இடங்களில் கொண்டாடப்பட்டது.

தமிழர் மத்தியில் மட்டுமல்லாமல், எமது மரபுகளை மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கோடு, முறையான பிரகடனம் மற்றும் அங்கீகாரம் பெறுவதற்கான செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட்டது. திட்டங்களின் செயற்பாடுகள் வாயிலாக, 2012இல் ஒன்ராரியோ மாநிலத்தில் உள்ள மார்க்கம், ஏயாக்ஸ், பிக்கெரிங் நகரங்களும் 2013இல் பிராம்ரன், தொரன்ரோ, நகரங்களும், 2014இல் ஒட்டாவா நகரமும் தைத் திங்களைத் தமிழரின் மரபுரிமைத் திங்களாக அறிவித்தன. 2014இல் ஒன்ராரியோ மாநில அரசு தமிழ் மரபுத் திங்களைச் சட்டவலுவுள்ளதாக உருவாக்கியது. 2016இல் கனடிய மத்திய அரசு தமிழ் மரபுத் திங்களை ஏற்றுச் சட்டமியற்றியது. இச்சட்டத்தின் ஊடாக கனடா நாடு முழுமையும் தைத்திங்களை தமிழ் மரபுரிமைத் திங்களாக அனைவரும் கொண்டாடக் கூடியதாக உள்ளது.

2019ஆம் ஆண்டில் தமிழ் மரபுத் திங்களை முன்னிட்டு, முதலாவது உலகத் தமிழியல் மாநாடு - தமிழியல்: இன்றும் இனியும் என்னும் தலைப்பில் ரொரன்ரோவில் நடைந்தேறியது. இம்மாநாட்டுக்கு, தாயகத்தில் இருந்தும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்தும் தமிழ் அறிஞர் வருகை தந்திருந்தனர். இம்மாபெரும் மாநாட்டைக் கனடாத் தமிழ்க் கல்லூரியானது அறிவகத்தோடும் கனடியத் தமிழர் தேசிய அவையினரோடும் இணைந்து நடத்தியிருந்தது.

- நன்றி -

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா